காட்டுப்புலியுடன் மாளவிகா மோகனன்
ADDED : 1722 days ago
ரஜினியின் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர் படங்களில் நடித்த மாளவிகா மோகனன் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தில் நடிக்கிறார். அதோடு பாலிவுட்டில் யுத்ரா உள்பட இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இதில் யுத்ரா படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது.
மேலும், சோசியல் மீடியாவில் ஆக்டீவாக இருந்து வரும் மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது அதிரடியான புகைப்படங்களை வெளியிட்டு வருபவர், தற்போது தனது இன்ஸ்டாகிராமில் காட்டில் உள்ள ஒரு புலிக்கு அருகில் தான் நிற்பது போன்ற ஒரு போட்டோவை பதிவிட்டுள்ளார். பலரும் அவரின் தைரியத்தை பாராட்டி வருகிறார்கள்.