உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ்

ஸ்ருதிஹாசனை வியக்க வைத்த பிரபாஸ்

பான்இந்தியா படமான சலாரில் முதன்முறையாக பிரபாசுடன் இணைந்து நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பில் நடித்து முடித்துள்ளார் ஸ்ருதி.

இதையடுத்து அவர் அளித்த ஒரு பேட்டியில், டோலிவுட்டில் நான் ஜோடி சேராமல் இருந்த ஒரே ஹீரோ பிரபாஸ். அவருடனும் இப்போது இணைந்து விட்டேன். இந்த சலார் படப்பிடிப்பு செட்டில் பிரபாஸ் மிக பணிவுடன் நடந்து கொண்டார். அது எனக்கு அவர் மீது வியப்பினையும், மரியாதையையும் ஏற்படுத்தியுள்ளது. அனைவரிடத்திலும் இயல்பாக பழகுவதோடு, செட்டில் நல்ல அதிர்வுகளை கொண்டு வரும் ஒருவர் என்றும் அந்த பேட்டியில் பிரபாஸ் பற்றி கூறியிருக்கிறார்.

அதோடு, சலார் படத்தின் தனது கேரக்டர் பற்றி தெரிவிக்காத ஸ்ருதிஹாசன், இந்த படத்தில் எனக்கு எந்த ஆக்சன் காட்சியும் கிடையாது. சலார் ஒரு அதிரடியான ஆக்சன் படமாக உருவாகி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !