ஷங்கர் - ராம்சரண் படத்தில் தென்கொரிய நடிகை?
ADDED : 1722 days ago
கமல் சட்டசபை தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருப்பதால் இந்தியன்-2 படப்பிடிப்பை நிறுத்தியுள்ள ஷங்கர், ராம்சரணை வைத்து இயக்கும் புதிய பட வேலைகளை தொடங்கியிருக்கிறார். தில் ராஜூ தயாரிக்கும் 50வது படமான இப்படத்தில் ராம்சரண் நாயகனாக நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் தயாராக உள்ளது.
இந்த படத்தில் தென்கொரிய நடிகையான பே சூஜி என்பவர் ராம்சரணுக்கு ஜோடியாக நடிப்பதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. இந்த பே சூஜி ஏற்கனவே ஷங்கரின் இந்தியன்-2 படத்தில் நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால் அந்த படத்தில் நடிக்கிறாரா இல்லையா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை. மேலும், இந்தியன்-2 படத்திற்கு இசையமைக்கும் அனிருத்தே ஷங்கரின் இந்த புதிய படத்திற்கும் இசையமைப்பதும் உறுதியாகியுள்ளது.