உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2 மொழிகளில் தயாராகும் ஆறா எனும் ஆரா

2 மொழிகளில் தயாராகும் ஆறா எனும் ஆரா

முருகா, பிடிச்சிருக்கு, கோழிகூவுது 2, கேங்ஸ் ஆப் மெட்ராஸ், சித்திரம் பேசுதடி 2 உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் அசோக் குமார். தற்போது அவர் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் ஆறா எனும் ஆரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஆக்க்ஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகி வரும் இப்படத்தை சாபு பிக் டிவி சார்பில் சாபு தயாரிக்கிறார். ஜோஸ் ஸ்டீபன் இயக்குகிறார். ஸ்வேதா ஜோயல் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் நிழல்கள் ரவி, மனோபாலா, ஆனந்தராஜ், பில்லி, ஷைனி, ஷகிலா மற்றும் பலர் நடிக்கின்றனர். ரவிசாமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது இறுதிகட்ட படப்பிடிப்புகள் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !