உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அசால்ட்டில் பெண் தாதாக்கள்

அசால்ட்டில் பெண் தாதாக்கள்

வொயிட் ஹோர்ஸ் சினிமா சார்பில் ஜெய்வந்த் தயாரித்து நடிக்கும் படம் அசால்ட். இதனை பூபதி ராஜா என்ற புதுமுகம் இயக்குகிறார். என்.எஸ்.ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய், விக்கி இசை அமைக்கிறார்கள்.

படம் பற்றி ஜெய்வந்த் கூறியதாவது: இது முழுக்க முழுக்க சென்னை தாதாக்களின் கதை. அவர்களின் மோதல், உறவு, பகை பற்றிய படம். காமெடி தான் பிரதானம் என்றாலும் படத்தின் கதை சீரியசாக இருக்கும். நான்கு தாதா குரூப்புகள் இருக்கிறது. எனது தலைமையினான தாதா குரூப்பில் 3 பெண் தாதாக்கள் இருக்கிறார்கள். சோனா, மைனா நாகு, களவாணி தேவி ஆகியோர் பெண் தாதாக்களாக நடித்திருக்கிறார்கள். அண்டர்கிரவுண்ட் தாதாக்கள் பற்றிய கதையில் இது வித்தியாசமாக இருக்கும். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !