டிஜிட்டலில் வெளியாகும் சிம்புவின் மன்மதன்
ADDED : 1668 days ago
சிம்பு கதாநாயகனாக நடித்து, பெரியளவில் ஹிட்டடித்த படங்களில் ஒன்று மன்மதன். 2004-ம் ஆண்டு வெளியான இந்த படம், இப்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு, புதுப்பொலிவுடன் வரும் மார்ச் 19ல் மீண்டும் தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது. படத்தை நந்தினி தேவி பிலிம்ஸ் தமிழ்நாடு முழுவதும் 150 தியேட்டர்களில் வெளியிடுகிறது!
சிம்பு முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்த படம் இது. யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் வரவேற்பு பெற்றன. சிம்புவின் பரபரப்பான கதை, திரைக்கதை படத்திற்கு பிளஸ் ஆக அமைந்தது. சிம்பு உடன் ஜோதிகா, சிந்து துலானி, கவுண்டமணி, சந்தானம் என பலரும் நடித்திருந்த இந்த படத்தை ஏ.ஜே.முருகன் இயக்கியிருந்தார். மன்மதன் மீண்டும் ரிலீஸாகவிருப்பது சிம்புவின் ரசிகர்களை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.