உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2 மில்லியன் - கேக் வெட்டி கொண்டாடிய டிடி!

2 மில்லியன் - கேக் வெட்டி கொண்டாடிய டிடி!

சமீபத்தில் விடுமுறையை ஜாலியாக கழிப்பதற்காக மாலத்தீவு சென்றிருந்த டிடி எனும் திவ்தர்ஷினி, அங்கிருந்தபடியே தனது புகைப்படங்கள் மற்றும் மாலத்தீவிற்கு சுற்றுலா செல்பவர்களுக்கான டிப்ஸ் ஆகியவற்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், தற்போது தன்னை இன்ஸ்டாகிராமில் பாலோ செய்பவர்களின் எண்ணிக்கை 2 மில்லியனாக உயர்ந்திருக்கிறது. அதையடுத்து இந்த மகிழ்ச்சியான தருணத்தை தனது நண்பர்களுடன் கேக் வெட்டி ஆரவாரத்துடன் கொண்டாடி மகிழ்ந்துள்ள டிடி, அந்த போட்டோக்களையும் வெளியிட்டுள்ளார்.

இதுவரை பிரபலங்கள் தங்களது பிறந்த நாள், திருமண நாள் போன்ற சிறந்த நாட்களைத்தான் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள். திவ்யதர்ஷினியோ இன்ஸ்டாகிராம் பாலோயர்கள் 2 மில்லியனை எட்டியதையும் கொண்டாடி மகிழ்ந்திருப்பது ஆச்சர்யமாக பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !