கபடி வீரராக களமிறங்கும் அதர்வா
ADDED : 1674 days ago
கில்லி, வெண்ணிலா கபடிக்குழு என கபடி விளையாட்டை மையமாகக் கொண்ட கதைகளில் உருவான சில படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. இந்தநிலையில், களவாணி உள்பட சில படங்களை இயக்கிய சற்குணமும் தற்போது கபடி விளையாட்டை மையமாக் கொண்ட ஒரு கதையை பெத்தேரி என்ற பெயரில் இயக்குகிறார்.
ராஜ்கிரண் கபடி கோச்சாக நடிக்கும் இந்த படத்தில் சற்குணம் இயக்கிய சண்டிவீரன் படத்தில் நடித்த அதர்வா நாயகனாக நடிக்கிறார். அதனால் தற்போது அதர்வாவுக்கு ஒரு கோச் மூலம் கபடி பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், கபடி விளையாட்டு பின்னணியில் பல படங்கள் வந்துள்ளதால் அந்த படங்களில் சொல்லப்படாத சில கபடி விளையாட்டின் சூட்சுமங்களை இந்த படத்தில் சொல்லப்போகிறாராம் சற்குணம்.