பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஏ.வி.மோகன் காலமானார்
ADDED : 1666 days ago
பிரபல தமிழ் ,ஹிந்தி திரைப்பட தயாரிப்பாளர் அணுரோஷினி பிலிம்ஸ் ஏ.வி.மோகன் உடல்நலக் குறைவால் இன்று (மார்ச் 14) காலமானார்.அவருக்கு வயது 81. தமிழில் தாலி தானம் ,விவாகா ஜீவன் என்ற இரு தமிழ் திரைப்படங்களை இயக்கி தயாரித்துள்ளார்.
இந்தியில் கில்லர்ஸ், க்ரிமினல், சுல்தானா தாகு, டாக்சி டாக்சி போன்ற 12க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்து உள்ளார். 250 க்கும் மேற்பட்ட ஆங்கில மொழி மாற்றுப்படங்களை வாங்கி தமிழில் வெளியிட்டு உள்ளார் . அதில் முக்கியமான படங்கள் எயிட் பிலோ, தி டாவென்சி கோட், எக்ஸ் மேன், தி வார்ட்டர் ஹார்ஸ் உள்ளிட்ட பல படங்களை வெளியிட்டு உள்ளார்.
இவர் வெளியிட்ட 95 சதவீத படங்கள் வெற்றி படங்களே .மக்களின் ரசனையை புரிந்து வைத்து இருந்தார். அன்னாரின் இறுதிச்சடங்கு நாளை (மார்ச் 15) நெசப்பாக்கக்கத்தில் நடைபெறுகிறது .