உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அரசுக்கு கோரிக்கை : நிர்வாணமாக போராடிய நடிகை

அரசுக்கு கோரிக்கை : நிர்வாணமாக போராடிய நடிகை

ஆஸ்கர் விருதுகளுக்கு இணையாக பிரான்சில் திரைப்படத் துறையினருக்கு சீசர் விருதுகள் வழங்கப்படுகிறது. கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த சில மாதங்களாக பிரான்சில் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், சீசர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

அந்த விழாவில், சிறந்த உடைக்கான விருதை அறிவிப்பதற்காக கோரின் மாசிரோ என்ற 57 வயது நடிகை மேடைக்கு அழைக்கப்பட்டார். நிகழ்ச்சிக்கு வரும்போது வேறு உடை உடுத்தியிருந்த கோரின், மேடைக்கு அழைத்த போது இரத்தம் தோய்ந்தது போல் காட்சியளிக்கும் உடை ஒன்றை அணிந்திருந்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது.

விழா ஏற்பாட்டாளர்கள் சுதாரிக்கும் முன்னர், மேடையிலேயே தன் உடைகளை களைந்து நிர்வாணமாக நின்றார் கோரின். அவரது உடலில், 'கலை இல்லையெனில், எதிர்காலம் இல்லை' என பிரெஞ்சு மொழியில் அவர் எழுதியிருந்தார். கூடவே, கலையைத் திருப்பிக் கொடுங்கள் ஜீன் என அந்நாட்டு பிரதமர் ஜீன் காஸ்டெக்சுக்கும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.

கோரினின் இந்த அதிரடி நடவடிக்கையால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !