கிக் பாக்ஸிங் பயிற்சியில் ரகுல் ப்ரீத் சிங்
ADDED : 1665 days ago
இந்தியன்- 2, அயலான் படங்களில் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பரவலாக நடித்து வருகிறார். அதோடு ஐதராபாத், வைசாக் போன்ற பகுதிகளில் எப்-45 என்ற பெயரில் உடற்பயிற்சி கூடங்கள் நடத்தி வருகிறார்.
இந்த நிலையில், தற்காப்பு கலைகளை பயிற்சி எடுப்பதில் அதிக ஆர்வம் கொண்டவரான இவர், தற்போது தான் குடியிருக்கும் அப்பார்ட்மென்டின் மாடியில் தனது பயிற்சியாளரிடம் கிக் பாக்ஸிங் பயிற்சி பெறும் வீடியோ ஒன்றை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதோடு, எழுந்திரு... உதை மீண்டும் -உதை என்று பதிவிட்டுள்ளார்.