பிறந்தநாளில் டுவிட்டரை விட்டு விலகிய ஆமீர்கான்
ஹிந்தித் திரையுலகின் முன்னணி நடிகரான ஆமீர்கான் நேற்று அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்தனர். சில முக்கிய பிரபலங்களுக்கு அதற்காக நன்றி தெரிவித்த ஆமீர் பின்னர் டுவிட்டரை விட்டு விலகுவதாக திடீரென அறிவித்தார்.
“எனது பிறந்தநாளில் அன்பையும், பாசத்தையும் காட்டிய அனைவருக்கும் நன்றி. எனது இதயம் நிறைந்தது. மற்றுமொரு முக்கியமான செய்தி. சமூக வலைத்தளத்தில் இதுதான் என்னுடைய கடைசி பதிவு. ஆனாலும், நான் ஆக்டிவ்வாகத்தான் இருப்பேன். இதற்கு முன்பு எப்படி தொடர்பு கொண்டோமோ அப்படியே தொடர்பு கொள்வோம். கூடுதலாக வேறொரு கணக்கை எனது தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியுள்ளது. அதனால் என்னைப் பற்றியும் எனது படங்களைப் பற்றியும் அதில் பார்க்கலாம்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆமீர் நேற்று விலகிய அவருடைய டுவிட்டர் கணக்கில் 2 கோடியே 67 லட்சம் பாலோயர்கள் இருந்தார்கள். அந்தக் கணக்கை அப்படியே டெலிட் செய்துவிட்டார்கள். புதிதாக அவரது தயாரிப்பு நிறுவனம் சார்பில் புதிய கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. அதில் இதுவரை 5 ஆயிரம் பாலோயர்கள் மட்டுமே பின் தொடர ஆரம்பித்துள்ளார்கள்.