175 மில்லியன் சாதனையைக் கடந்த கேஜிஎப் 2 டீசர்
ADDED : 1708 days ago
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் கதாநாயகனாக நடிக்கும் கேஜிஎப் 2 படத்தின் டீசர் கடந்த ஜனவரி மாதம் யூ டியூபில் வெளியாகி புதிய சாதனையைப் படைத்தது. அதற்கு முந்தைய பல இந்திய சாதனைகளை முறியடித்தது.
தற்போது இந்த டீசர் 175 மில்லியன் பார்வைகளைப் பெற்று உலக அளவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்த டீசர் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. இதற்கு முன்பு 2019ம் ஆண்டு வெளிவந்த முலன் படத்தின் டீசர் 175 மில்லியன் பெற்றதுதான் சாதனையாக இருந்தது. அந்த சாதனையைத் தற்போது கேஜிஎப் 2 டீசர் முறியடித்துள்ளது.
முலன் டீசர் தான் இதுவரையில் உலக அளவில் முதலிடத்தைப் பிடித்த டீசர் என்ற தரவு விக்கிபீடியா மற்றும் பல்வேறு உலகளாவின இணையதளங்களிலும் உள்ளது. ஆனால், அதற்குரிய யு டியூப் வீடியோவை எவ்வளவு தேடினாலும் கிடைக்கவில்லை. ஏதோ ஒரு காரணத்திற்காக அந்த வீடியோவை நீக்கிவிட்டு புதிதாக வேறு ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்கள் என்ற தகவல்தான் கிடைக்கிறது.
'கேஜிஎப் 2' படம் ஜுலை 16ம் தேதி தியேட்டர்களில் வெளியாக உள்ளது.