நாகார்ஜுனா ஜோடியாக காஜல் அகர்வால்
ADDED : 1667 days ago
திருமணத்துக்கு பின்னும் ரசிகர்களிடமும் திரையுலகினரிடமும் கிரேஸ் குறையாத நடிகையாக வலம் வருகிறார் காஜல் அகர்வால். குறிப்பாக தெலுங்கில் சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா, விஷ்ணு மஞ்சுவுடன் நடித்துள்ள 'மொசகல்லு' என இவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸாக இருகின்றன. இதையடுத்து நாகர்ஜுனா ஜோடியாக நடிக்க இருக்கிறார் காஜல் அகர்வால்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்த தகவலை தானே கூறியுள்ள காஜல் அகர்வால், இந்தப்படத்தில் தான் இதுவரை நடிக்காத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறியுள்ளார். மேலும் நாகார்ஜுனாவுடன் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் நிறைவேற போவதால், படப்பிடிப்பு நாளை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறாராம். இந்தப்படத்தை பிரவீன் சத்தாரு இயக்குகிறார்.