உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவாஜி வீட்டிற்கு சென்ற குஷ்பு - திரைப்பிரபலங்களிடம் ஓட்டு சேகரிப்பு

சிவாஜி வீட்டிற்கு சென்ற குஷ்பு - திரைப்பிரபலங்களிடம் ஓட்டு சேகரிப்பு

தற்போது பாஜகவில் இடம் பெற்றுள்ள நடிகை குஷ்பு, சென்னையிலுள்ள ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக களமிறங்கியிருக்கிறார். திமுக, காங்கிரஸ் கட்சிகளில் தான் இடம் பெற்றிருந்தபோது தனக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் தற்போது முதன்முதலாக அந்த வாய்ப்பினை பாஜக கொடுத்திருப்பதால் ஆயிரம் விளக்கு தொகுதியில் வீதி வீதியாக சென்று தீவிர பிரச்சாரம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார் குஷ்பு.

மேலும், ஆயிரம்விளக்கு தொகுதியில் அமைந்துள்ள ரஜினிகாந்தின் வீட்டிற்கும் விரைவில் சென்று ஆதரவு கேட்கப்போகிறேன் என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறிய குஷ்பு, மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் இல்லத்திற்கு சென்று, சமீபத்தில் பாஜகவில் இணைந்த சிவாஜியின் மூத்த மகனான ராம்குமாருக்கு வாழ்த்து கூறியிருக்கிறார். அப்போது சிவாஜியின் வீட்டில் எடுத்துக்கொண்ட போட்டோவையும் இணைய பக்கத்தில் வெளியிட்டு தனக்கு சிறப்பான வரவேற்பு அளித்ததாகவும் தெரிவித்துள்ளார் குஷ்பு.


தொடர்ந்து இந்த தொகுதியில் பல திரைப்பிரபலங்களிடம் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். குறிப்பாக நடிகையும், பா.ஜ. பிரமுகருமான காயத்ரி ரகுராம், நடன மாஸ்டர் பிருந்தார், தயாரிப்பாளர் சதீஷ் உள்ளிட்டவர்களிடமும் ஓட்டு சேகரித்தார். ஓட்டு சேகரிப்பின் போது அவர்களுடன் தான் எடுத்து கொண்ட போட்டோவை சமூவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !