ராம்சரண் பிறந்த நாளில் ஆர்ஆர்ஆர் தரும் சர்ப்ரைஸ்
ADDED : 1713 days ago
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம் சரண், ஆலியாபட் உள்பட பலர் நடித்து வரும் படம் ஆர்ஆர்ஆர். சுதந்திர போராட்ட கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ஜூனியர் என்டிஆர் கோமர பீம் வேடத்திலும், ராம்சரண் அல்லூரி சீதா ராமராஜூவாகவும் நடிக்கிறார்கள். இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படம் வருகிற அக்டோபர் 13-ந்தேதி திரைக்கு வருகிறது.
இப்படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரணின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியான நிலையில்,சீதா வேடத்தில் நடிக்கும் பாலிவுட் நடிகை ஆலியாபட்டின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் கடந்த மார்ச் 15-ந்தேதி அவரது பிறந்த நாளில் வெளியிடப்பட்டது. இந்நிலையில், மார்ச் 27ல் ராம்சரணின் 36ஆவது பிறந்த நாள் என்பதால் அன்று ஆர்ஆர்ஆர் படத்தில் அவர் நடிக்கும் கதாபாத்திரத்தின் அதிரடியான போஸ்டர் ஒன்று வெளியிடப்பட இருப்பதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.