புஷ்பாவில் இணைந்த பஹத் பாசில்
ADDED : 1713 days ago
தெலுங்கில் அல்லு அர்ஜூன் நடித்து வரும் பான் இந்தியா படம் புஷ்பா. இந்த படத்தில் வில்லனாக நடிக்க முதலில் விஜய் சேதுபதியைத் தான் அணுகினர். ஆனால் அவர் கால்சீட் பிரச்சினை காரணமாக அப்படத்தில் நடிக்கவில்லை. அதையடுத்து ஆர்யாவிடம் பேசினர், அவரும் மறுத்துவிட்டார்.
அவரைத் தொடர்ந்து தற்போது பிரபல மலையாள நடிகர் பஹத் பாசிலை இப்படத்தில் வில்லனாக ஒப்பந்தம் செய்துள்ளனர். ஏற்கனவே தமிழ், மலையாளத்திலும் ஓரளவுக்கு ரசிகர்களை அல்லு அர்ஜூன் வைத்திருக்கும் நிலையில இப்போது பஹத் பாசிலும் இணைந்திருப்பதால் தென்னிந்தியாவில் புஷ்பா பெரிய அளவில் வெற்றிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இப்படத்தை சுகுமார் இயக்குகிறார். ஆகஸ்ட் 13ல் புஷ்பா திரைக்கு வருகிறது.