கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட அம்பிகா, சுஹாசினி
ADDED : 1681 days ago
இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவே போடுகிறார்கள். பல அரசியல் பிரபலங்கள் தொடர்ந்து தடுப்பூசியைப் போட்டு வருகிறார்கள். அது போலவே சினிமா பிரபலங்களும் போட்டுக் கொண்டு வருகிறார்கள்.
80களின் முன்னணி கதாநாயகிகளான அம்பிகா, சுஹாசினி இருவரும் இன்று கொரோனா தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகளில் போட்டுக் கொண்டனர்.
மக்களும் எந்தவிதமான பயம் இல்லாமல் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம் என மத்திய அரசும், மாநில அரசும் பொதுமக்களிடம் அறிவுறுத்திக் கொண்டு வருகிறது.
இப்படி அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் போட்டுக் கொள்ளும் போது மக்களும் முன்வந்து போட்டுக் கொள்வார்கள். தாங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதை இரண்டு நடிகைகளும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்கள்.