ஒரே தளத்தில் படப்பிடிப்பு : ரஜினியை சந்தித்த சரவணன்
ADDED : 1658 days ago
சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் அண்ணாத்த படப்பிடிப்பு சென்னையில் மீண்டும் துவங்கி உள்ளது. சில மாத ஓய்வுக்கு பின் ரஜினியும் படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளார். தற்போது ரஜினி - நயன்தாரா சம்பந்தப்பட்ட பாடல் காட்சி படமாகி வருவதாக தெரிகிறது. ரஜினி படப்பிடிப்பு நடக்கும் அதே ஸ்டுடியோவின் மற்றொரு பகுதியில், ஜவுளிக்கடை அதிபர் சரவணன் ஹீரோவாக நடித்து வரும் படப்பிடிப்பும் நடந்து வருகிறது. ஜே.டி- ஜெர்ரி இயக்கத்தில் பிரம்மாண்டமாய் தயாராகிறது இந்த படம். இந்நிலையில் படப்பிடிப்பின் போது ஓய்வு நேரத்தில் ரஜினியும், சரவணன் சந்தித்து பேசி உள்ளனர். இதுதொடர்பான போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைரலானது.