சாய்பல்லவி நடிக்க மறுத்த வேடத்தில் நித்யா மேனன்
ADDED : 1655 days ago
அய்யப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் படத்தில் பவன் கல்யாண்- ராணா ஆகிய இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தில் ராணாவுக்கு ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியிருக்கிறார். பவன்கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க சாய்பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் தற்போது தெலுங்கில் முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் கூட முக்கியத்துவம் வாய்ந்த ஹீரோயினாக நடித்து வரும் சாய் பல்லவி, இதில் நடிக்க விருப்பம் இல்லை என்று மறுத்து விட்டார். அதனால் இப்போது அவர் நடிக்கயிருந்த வேடத்தில் நித்யாமேனனை ஒப்பந்தம் செய்துள்ளனர். ஏற்கனவே தெலுங்கில் ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் போன்ற நடிகர்களுடன் நடித்துள்ள நித்யாமேனன், முதன்முறையாக பவன்கல்யாணுடன் தற்போது இணைகிறார்.