வலிமை பற்றி புதுத்தகவல்
ADDED : 1750 days ago
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் ஹூமா குரோசி, சுமித்ரா, கார்த்திகேயா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஸ்பெயினில் நடைபெற உள்ள ஆக்சன் காட்சியோடு படப்பிடிப்பு நிறைவு பெற உள்ளது.
அஜித்தின் 50ஆவது பிறநத நாளான மே 1-ந்தேதி முதல் வலிமை அப்டேட் வெளியாகும் என்று தெரிவித்துள்ள தயாரிப்பாளர் போனிகபூர், தற்போது வலிமை படம் குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில், வலிமை படம் அதிரடியான சண்டை காட்சிகள் நிறைந்த ஒரு பவர் பேக்டு குடும்ப படமாக இருக்கும். அஜித் ரசிகர்களையும், சினிமா காதலர்களையும் திருப்திபடுத்தும் படமாகவும் இருக்கும் என்று தெரிவித்துள்ளார் போனிகபூர்.