ஆர்ஆர்ஆர் - ராம்சரணனின் புதிய போஸ்டர் வெளியீடு
ADDED : 1654 days ago
பாகுபலி, பாகுபலி 2 படங்களுக்கு பிறகு ராஜமவுலி இயக்கி வரும் பிரமாண்ட படம் ஆர்ஆர்ஆர். ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியாபட் உள்பட பலர் நடிக்கும் இந்த படம் வருகிற அக்டோபர் 13ல் திரைக்கு வருகிறது. இப்படத்தில் ஜூனியர் என்டிஆர் கோமரம் பீமாகவும், ராம்சரண் அல்லூரி சீதா ராமராஜுவாகவும், ஆலியா பட் சீதை வேடத்திலும் நடிக்கிறார்கள்.
ஏற்கனவே இந்த படத்தில் பல போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், நாளை ராம் சரணின் பிறந்த நாள் என்பதால் அவரது போஸ்டர் ஒன்றை இன்றே வெளியிட்டுள்ளார். அதில், ராமர் வேடத்தில் கையில் வில்லை வைத்துக் கொண்டு போஸ் கொடுத்துள்ளார் ராம்சரண். கடந்த ஆண்டு ராம்சரணின் பிறந்த நாளில் வீடியோ டீசர் ஒன்று வெளியிட்டப்பட்ட நிலையில் இந்த ஆண்டு பிறந்த நாளில் போஸ்டர் வெளியிட்டுள்ளது.