மேலும் செய்திகள்
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1647 days ago
நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர்
1647 days ago
தெலுங்கு சினிமாவின் இளம் முன்னணி ஹீரோக்களில் ஒருவர் அல்லு அர்ஜுன்.. இவர் தெலுங்கில் கே.ராகவேந்திர ராவ் இயக்கத்தில் அறிமுகமான 'கங்கோத்ரி' என்கிற படம் வெளியாகி பதினெட்டு ஆண்டுகள் ஆகிறது. அல்லு அர்ஜுன் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் இதை விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இதனை நினைவு கூர்ந்துள்ள அல்லு அர்ஜுன், ”என்னுடைய இந்த பதினெட்டு ஆண்டு பயணத்தில் உடன் உறுதுணையாக நின்ற அனைவருக்கும் நன்றி. என் மனம் முழுதும் நன்றியால் நிரம்பி வழிகிறது. இத்தனை ஆண்டுகளால் என் மீது காட்டப்பட்டு வந்த அளவற்ற அன்பினால் நான் உண்மையிலேயே ஆசீர்வதிக்கப்பட்டுளேன்” என கூறியுள்ளார்.
கங்கோத்ரி படத்தில் அறிமுகமானாலும் அடுத்ததாக சுகுமார் இயக்கத்தில் வெளியான ஆர்யா படம் தான் அல்லு அர்ஜுனை முன்னணி நடிகராக உயர்த்தியது. தற்போது அதே சுகுமார் இயக்கத்தில் தான், 'புஷ்பா' என்கிற படத்தில் அல்லு அர்ஜுன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
1647 days ago
1647 days ago