உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / வணிக நோக்கில் கமல் பெயர், புகைப்படம் பயன்படுத்த தடை

வணிக நோக்கில் கமல் பெயர், புகைப்படம் பயன்படுத்த தடை


'ஏஐ' வளர்ச்சியில் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் தனிப்பட்ட உரிமைகள் மீறப்படுவதும் தொடர்கிறது. குறிப்பாக சிலர் பிரபலங்களின் புகைப்படங்கள், வீடியோக்களை வணிக நோக்குடன் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பல சினிமா பிரபலங்கள் அவர்களது தனிப்பட்ட ஆளுமை உரிமையைப் பாதுகாக்கும் வகையில் நீதிமன்றம் சென்று அதற்கான தடை உத்தரவை பெற்று வருகின்றனர். அந்த வகையில், ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன், சிரஞ்சீவி, நாகார்ஜுனா, மாதவன், இளையராஜா, பவன் கல்யாண் ஆகியோர் தங்களின் புகைப்படங்கள், வீடியோக்களை வணிக நோக்குடன் பயன்படுத்த தடை பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் நடிகர் கமல்ஹாசன், தனது பெயர் புகைப்படங்களை அனுமதி இன்றி பயன்படுத்த தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீயே விடை என்கிற தனியார் நிறுவனம் அனுமதியின்றி தனது பெயர், உலக நாயகன் என்ற பட்டம் மற்றும் புகைப்படங்களை டீசர்ட்டில் அச்சடித்து விற்பனை செய்ததை சுட்டிக்காட்டி உரிமையியல் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கமல்ஹாசனின் அனுமதியின்றி அவரின் புகைப்படங்கள், பெயர், உலக நாயகன் என்ற பெயர் போன்றவற்றை வணிக நோக்கில் பயன்படுத்த இடைக்கால தடை விதித்தது. மேலும், அவரின் கார்ட்டூன் படங்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !