பொங்கல் விழாவை கொண்டாட வராத அட்டகத்தி தினேஷ்
முரளி கிரிஷ் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் இரட்டை வேடங்களில் நடிக்கும் படம் கருப்பு பல்சர். இந்த படக் குழுவினர் இன்று சென்னையில் பொங்கல் விழா கொண்டாடினர். இந்த விழாவில் ஹீரோ அட்டகத்தி தினேஷ் கலந்து கொள்ளவில்லை. இது குறித்து இயக்குனர் கூறுகையில், ‛‛ஹீரோ மதுரையில் வேறு ஒரு படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் இங்கு வரவில்லை. ஆனால் படப்பிடிப்புக்கு மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்தார். ஜல்லிக்கட்டு பின்னணியில் இந்த கதை உருவாகிறது. லப்பர் பந்து படம் முடித்துவிட்டு நூற்றுக்கும் அதிகமான கதை கெட்டவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.
இந்த படத்தில் தனது பெயரை விஆர் தினேஷ் என மாற்றி இருக்கிறார். இதில் சரணவ சுப்பையா, மன்சூரலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜனவரி 30ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. படத்துக்கு சென்சார் ஆகிவிட்டது. படத்தில் விலங்குகள் சம்பந்தப்பட்ட காட்சி இருப்பதால் விலங்கு நல வாரியத்திடம் முறைப்படி அனுமதி வாங்கி விட்டோம், எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் நிஜ ஜல்லிக்கட்டை பார்த்து அங்கேயும் படப்பிடிப்பு நடத்தினோம்'' என்றார்.