உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அமெரிக்காவில் ஒரு மில்லியன் பிரிமியர் வசூலை தாண்டிய சிரஞ்சீவியின் படம்

அமெரிக்காவில் ஒரு மில்லியன் பிரிமியர் வசூலை தாண்டிய சிரஞ்சீவியின் படம்

தெலுங்கில் சிரஞ்சீவி, நயன்தாரா, கேத்ரின் தெரசா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள உள்ள படம் மன சங்கர வர பிரசாத் காரு. 200 கோடி பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படம் ஜனவரி 12-ம் தேதியான இன்று திரைக்கு வந்துள்ளது. அனில் ரவி புடி இயக்கி உள்ள இந்த படத்தின் முதல் காட்சி நேற்று இரவு திரையிடப்பட்டது. கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. அதோடு இந்த படம் வெளிநாடுகளில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் ஒரு மில்லியன் பிரிமியர் வசூலை தாண்டி உள்ளது. இது இந்த படத்திற்காக ஒரு சிறந்த ஓப்பனிங்காக பார்க்கப்படும் நிலையில் அமெரிக்க பாக்ஸ் ஆபிஸில் இந்த சாதனையை எட்டிய சிரஞ்சீவியின் இரண்டாவது படம் இது என்றும் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !