அஜித் 64வது படத்தின் அறிவிப்பு பொங்கலுக்கு வெளியாகிறது
குட் பேட் அக்லி படத்தை அடுத்து மீண்டும் அஜித் நடிக்கும் 64வது படத்தையும் நானே இயக்குகிறேன் என்று ஏற்கனவே இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறியிருந்தார். அதோடு 2026ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் அந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கப்போவதாகவும் கூறினார். அஜித்துக்கு ஜோடியாக ஸ்ரீ லீலா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. என்றாலும் அப்படம் குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை. குட் பேட் அக்லி படத்தை அடுத்து தொடர்ந்து கார் ரேஸில் பங்கேற்று வருகிறார் அஜித். இந்நிலையில் வருகிற பொங்கல் தினத்தில் அஜித் 64 வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட திட்டமிட்டு வருவதாக கோலிவிட்டில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அஜித்தின் கார் குறித்த ஆவணப்படம் உருவாகி உள்ள நிலையில், இந்த படத்தை அஜித்தின் பிறந்தநாளான வருகிற மே ஒன்றாம் தேதி வெளியிடவும் திட்டமிட்டுள்ளார்கள்.