சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்து நடிக்கபோவது சிம்புவா? துருவ் விக்ரமா?
சிவகார்த்திகேயன், ரவி மோகன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கி உள்ள பராசக்தி படம் 10ம் தேதி திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது . இந்தப் படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தபோதும், வெளிநாடுகளில் அமரன் படத்தை விட கூடுதலாக வசூலித்து வருகிறது. அந்த வகையில் இதற்கு முன்பு சுதா கொங்கரா இயக்கிய இறுதிச்சுற்று, சூரரைப்போற்று போன்ற வெற்றி படங்களின் வரிசையில் இந்த பராசக்தியும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சுதா அடுத்தபடியாக சிம்பு, துருவ் விக்ரம் ஆகிய இருவரில் ஒருவரை வைத்து தனது அடுத்த படத்தை இயக்குவார் என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன. கடந்த காலங்களில் தான் இயக்கிய ஒவ்வொரு படங்களுக்குமிடையே 6 ஆண்டுகள், 4 ஆண்டுகள் என இடைவெளி எடுத்துக் கொண்ட சுதா, தனது அடுத்த படத்தை உடனடியாக இயக்குவதற்கு திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.