உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிரித்விராஜ் இயக்கும் மம்முட்டி படம் : உறுதி செய்த கதாசிரியர்

பிரித்விராஜ் இயக்கும் மம்முட்டி படம் : உறுதி செய்த கதாசிரியர்

கிட்டத்தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துவிட்ட மலையாள நடிகர் பிரித்விராஜ், கடந்த இரண்டு வருடங்களுக்கு முன், மலையாளத்தில் லூசிபர் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக மாறினார். மோகன்லால் கதாநாயகனாக நடித்த இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் மலையாள சினிமாவிலேயே முதன்முறையாக 200 கோடி ரூபாய் என்கிற மாபெரும் வசூல் இலக்கையும் எட்டியது. மோகன்லாலை வைத்து படம் இயக்கியதால் அடுத்தது எப்போது மம்முட்டியை வைத்து படம் இயக்குவீர்கள் என்கிற கேள்வி பிரித்விராஜிடமும் பல முறை கேட்கப்பட்டு வந்தது..

அதேசமயம் பிரித்விராஜோ லூசிபர் படத்தின் வெற்றி காரணமாக மீண்டும் மோகன்லாலை வைத்து அதன் இரண்டாம் பாகமான 'எம்புரான்' படத்தை அடுத்ததாக இயக்கவுள்ளார்.. அப்படியானால் மம்முட்டி படத்தை இயக்க போவதில்லையா என கேட்டால், “மம்முட்டியின் தேதிகள் கிடைத்தால் அவரை வைத்து படம் இயக்க தயார் என்று நான் கூறினேன்.. அவரும் கிரீன் சிக்னல் கொடுத்து விட்டார்.. ஆனால் இன்னும் அவருக்கான கதை என்னிடம் வந்து சேரவில்லை” என்று கூறிவந்தார்.

இந்தநிலையில் லூசிபர் மற்றும் அதன் இரண்டாம் பாகமான எம்புரான் ஆகிய படங்களுக்கு கதை எழுதிய கதாசிரியரும் நடிகருமான முரளிகோபி, சமீபத்திய பேட்டி ஒன்றில், “மம்முட்டி-பிரித்விராஜ் படத்திற்கான கதை தயாராகிவிட்டது. அவர்கள் கூட்டணி இணையப்போவதில் எந்த சந்தேகமும் வேண்டாம்” என கூறியுள்ளார். தவிர வேறொரு இயக்குனரின் டைரக்சனில் மம்முட்டி நடிக்கும் படத்திற்கும் கதை எழுதியுள்ள இவர், பிரித்விராஜ் படத்திற்காக மம்முட்டிக்கு தான் எழுதிய கதையையும் சொல்லி அவரிடம் ஒகேவும் வாங்கிவிட்டாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !