வில்லனாக அறிமுகமாகும் நாகேஷ் பேரன்
ADDED : 1660 days ago
பழம்பெரும் நடிகர் நாகேஷின் பேரனும், பிரபல நடிகர் ஆனந்தபாபுவின் மகனுமான கஜேஷ், ‛கற்கண்டு' என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு அவருக்கு பெரியதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் தற்போது அவர் நிர்மல் இயக்கும் வெள்ளகுச்சி என்ற படத்தில் வில்லனாக புது அவதாரம் எடுக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது : வில்லனாக நடிக்க எனக்கு முதலில் தயக்கம் இருந்தது. கதையின் களமும் கதாபாத்திரத்தின் முக்கியத்துவமும் எனக்கு பிடித்திருந்தால் நடிக்க சம்மதித்தேன். அபூர்வ சகோதார்கள் உள்ளிட்ட பல படங்களில் தாத்தா வில்லனாக நடித்திருக்கிறார். அப்பாவும் வில்லனாக நடித்திருக்கிறார். அதனால் நானும் தயக்கம் இன்றி வில்லன் கேரக்டரில் நடிக்கிறேன். என்றார்.