டியூசன் வாத்தியாராக நடிக்கும் விஜய் ஆண்டனி
ADDED : 1669 days ago
விஜய் ஆண்டனி தற்போது நடித்து வரும் படம் கோடியில் ஒருவன். ஆள், மெட்ரோ படங்களை இயக்கிய ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார். விஜய் ஆண்டனி ஜோடியாக ஆத்மிகா நடிக்கிறார். நிவாஸ் கே.பிரசன்னா இசை அமைக்கிறார், உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்த படத்தில் விஜய் ஆண்டனி டியூசன் வாத்தியாராக நடிக்கிறார். மாணவர்களுக்கு பாடம் நடத்துவதுடன் எதிரிகளுக்கு அவர்கள் பாணியில் பாடம் நடத்துவது தான் கதை. சமூகம் சார்ந்த பல பிரச்னைகளை டியூசன் ஆசிரியர் பேசுகிறார். ஒரு தனிமனிதன் நினைத்தால் கூட சமூக மாற்றத்தை கொண்டு வர முடியும் என்கிற கருத்தை சொல்கிற படமாக உருவாகி உள்ளது.
இந்த படத்திற்காக விஜய் ஆண்டனி தனது சம்பளத்தை குறைத்திருப்பதோடு படத்தின் எடிட்டிங் பணிகளையும் அவரே மேற்கொண்டு வருகிறார். ஏப்ரல் மாதம் படம் வெளிவரும் என்று தெரிகிறது.