டில்லியில் அஜய் தேவ்கன் தாக்கப்பட்டாரா?
ADDED : 1697 days ago
பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் டில்லியில் உள்ள மால் ஒன்றில் அமைந்துள்ள பப் ஒன்றுக்கு சென்றபோது தாக்கப்பட்டார் என்பது போன்று ஒரு வீடியோவும், அதுகுறித்த செய்தியும் சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. ஆனால் இந்த செய்தியில் எந்த உண்மையும் இல்லை என அஜய் தேவ்கன் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அஜய் தேவ்கன் குழுவினர் வெளியிட்டுள்ள செய்தியில், “ஆதாரமற்ற செய்திகளையும் யாரோ தாக்கப்பட்டதை அஜய் தேவகன் தாக்கப்பட்டது போன்று தவறாக சித்தரித்தும் வதந்திகளை பரப்ப வேண்டாம். அஜய் தேவ்கன் டில்லிக்கே போகவில்லை. கொரோனா தாக்கம் துவங்கியதிலிருந்து கடந்த பதினான்கு மாதங்களாக அவர் மும்பையில் தான் இருக்கிறார். பின் எப்படி அவர் டில்லியில் தாக்கப்பட்டிருக்க முடியும்..?” என அதில் கூறியுள்ளனர்.