உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இணை, துணை இயக்குனர்களை கவுரவப்படுத்திய கார்த்திக் சுப்பராஜ்

இணை, துணை இயக்குனர்களை கவுரவப்படுத்திய கார்த்திக் சுப்பராஜ்

பொதுவாக சினிமாவில் அதிகம் உழைப்பவர்கள் துணை இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள். அவர்கள் இயக்குனர் ஆகும் கனவில் இருப்பதால் அந்த லட்சியத்தை அடைய சம்பளம் பற்றி கவலைப்படாமல், நேரம் பற்றி கவலைப்படாமல் உழைப்பார்கள். படம் வெற்றி பெற்றாலும், தோல்வி அடைந்தாலும் அவர்களது உழைப்புக்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை.

சமீபகாலமாக பாடல் வெளியீட்டு விழாக்களில் இணை, துணை இயக்குனர்களை அறிமுகப்படுத்தும் போக்கு அதிகரித்திருக்கிறது. இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அதையும் தாண்டி அவர்களுக்கு ஒரு கவுரவத்தை ஏற்படுத்தி தந்திருக்கிறார்.

விக்ரமின் 60வது படத்தை இயக்க இருக்கிறார் கார்த்திக் சுப்பராஜ். இதில் விக்ரமுடன் அவரது மகன் துருவ் விக்ரமும் நடிக்கிறார். செவன் ஸ்கிரீன் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். சந்தோஷ் நாராணயன் இசை அமைக்கிறார்.

இந்த படத்தை பற்றி அப்டேட்டுகளை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார் கார்த்திக் சுப்பராஜ். அதில் ஒரு பகுதியாக படத்தில் பணியாற்ற இருக்கும் இணை மற்றும் துணை இயக்குனர்களின் படங்களை அவர்களது பெயர்களுடன் வெளியிட்டிருக்கிறார். கார்த்திக் சுப்பராஜை பலரும் பாராட்டுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !