உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தரண் குமாரின் அஸ்கு மாரோ

தரண் குமாரின் அஸ்கு மாரோ

தமிழ் சினிமாவில் தனி ஆல்பங்கள் இதற்கு முன் பெரிதாக வெற்றி பெறவில்லை. பலரும் ஆல்பம் வெளியிட்டு அது தோல்வியில் தான் முடிந்திருக்கிறது. ஆனால் ஹிந்தியில் வாரத்திற்கு ஒரு ஆல்பம் வெளிவந்தது. தற்போது தமிழிலும் தனி இசை ஆல்பங்கள் வெளிவருது அதிகரித்து வருவதோடு பெரிய அளவில் தனி வியாபாரமாக மாறி உள்ளது.

சமீபத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் அவரது மகள் தீ பாடிய என்ஜாயி எஞ்சாமி உலக அளவில் டிரண்டிங் ஆகியிருக்கிறது. யுவன் வெளியிட்ட டாப்பு டக்கரு ஆல்பமும் ஹிட்டானது. இதனால் தனி இசை ஆல்பம் வெளியிடுவது அதிகரித்துள்ளது.

அந்த வரிசையில் தற்போது தருண் குமார் அஸ்கு மாரோ என்ற இசை ஆல்பத்திற்கு இசை அமைத்து, பாடி, நடித்தும் உள்ளார். அவருடன் கவின், தேஜஸ்வி ஆகியோரும் ஆடியுள்ளனர். சிவாங்கியும் உடன் பாடி ஆடியும் இருக்கிறார். கு.கார்த்திக் பாடலை எழுதி உள்ளார். டோங்லி ஜூம்போ இயக்கி உள்ளார். தி ரூட் நாய்ஸ் அண்ட் க்ரைன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !