உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / புதுமுங்களின் வரிசி

புதுமுங்களின் வரிசி

கார்த்திக் தாஸ் என்ற புதுமுகம் இயக்கி நடித்திருக்கும் படம் வரிசி. இதில் அவருடன் சப்னா தாஸ், கிருஷ்ணா, துஷாரா, ஆவிஸ் மனோஜ், ஜெயஸ்ரீ, அனுபமா குமார், உள்பட பலர் நடித்திருக்கிறார்கள். மிதுன் மோகன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார், நந்தா இசை அமைத்திருக்கிறார்.

படம் பற்றி கார்த்திக் தாஸ் கூறியதாவது: இத்திரைப்படம் பல கலைஞர்களின் திரை கனவை நினைவாக்கும் பெரும் முயற்சி. இத்திரைப்படத்தில் பணியாற்றியிருக்கும் பல கலைஞர்களுக்கு இதுவே முதல் திரைப்படம். வரிசி என்றால் மீனவர்கள் மொழியில் தூண்டில் என்று பொருள். இத்திரைப்படம் காதல், நட்பு, நகைச்சுவை, திகிலென பல்சுவைகளின் விருந்தாக இருக்கும். மேலும் சமூகத்தில் பெண்களுக்கு நிகழும் அவலங்களை பற்றியும் வலுவாக பேசும். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !