உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சினிமா ஆகும் 3 தமிழ் நாவல்கள்

சினிமா ஆகும் 3 தமிழ் நாவல்கள்

சிறிய பட்ஜெட்டில் படங்களை தயாரித்து பெரிய வெற்றியை கொடுத்து புதிய டிரண்டை உருவாக்கிய நிறுவனம் திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட். இதன் உரிமையாளராக தயாரிப்பாளர் சி.வி.குமார் இருக்கிறார். அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும், தெகிடி, முண்டாசுபட்டி, சரபம், இன்று நேற்று நாளை என தொடர் வெற்றிகளை கொடுத்த நிறுவனம். தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்குனராகி மாயவன், கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் படங்களை இயக்கினார்.



இந்த நிலையில் இந்த நிறுவனம் தமிழில் பிரபலமான 3 நாவல்களை படமாக்குகிறது. பிரபல எழுத்தாளர் தமிழ்மகன் எழுதிய ஆபரேஷன் நோவா, நான் ரம்யாவாக இருக்கிறேன், வேங்கை நங்கூரத்தின் ஜின் குறிப்புகள் ஆகிய நாவல்களை படமாக்கும் உரிமத்தை பெற்றுள்ளது திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம். இதனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !