உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்தியில் ரீமேக் ஆகும் துருவங்கள் 16: ரகுமான் கேரக்டரில் வருண் தவான் நடிக்கிறார்

இந்தியில் ரீமேக் ஆகும் துருவங்கள் 16: ரகுமான் கேரக்டரில் வருண் தவான் நடிக்கிறார்

5 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய படம் துருவங்கள் 16. அப்போது 24 வயதே நிரம்பிய கார்த்திக் நரேன் இயக்கி இருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. கிளைமாக்சை யாராலும் யூகிக்க முடியாத சஸ்பென்ஸ் த்ரில்லர் படமாக உருவாகி இருந்தது.



தற்போது இந்த படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. படத்திற்கு சங்கி என்று டைட்டில் வைத்துள்ளனர். சாஜித் நாடியவாலா தயாரிக்கிறார். ரகுமான் நடித்துள்ள போலீஸ் அதிகாரி கேரக்டரில் வருண் தவான் நடிக்கவுள்ளார். தற்போது இரண்டு படங்களில் நடித்து வரும் வருண் தவான், அந்த படங்களை முடித்துவிட்டு சங்கியில் நடிக்க இருக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !