உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமிழில் வெளியாகும் துல்கர் சல்மானின் மலையாள படம்

தமிழில் வெளியாகும் துல்கர் சல்மானின் மலையாள படம்

துல்கர் சல்மான் தற்போது நடித்து முடித்துள்ள மலையாளப் படம் குரூப். இப்படத்தில் ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, ஷன்னி வேய்ன், டொவினோ தாமஸ், ஷிவஜித், பத்மனாபன், சுதீஷ், அனுபமா பரமேஸ்வரன், விஜயராகவன் சுரபி லக்ஷ்மி, கிரிஷ், குஞ்சன், சாதிக் மற்றும் பரத் உள்பட பலர் நடித்துள்ளனர்.



ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். நிதின் கே.ஜோஷ் கதை எழுதியுள்ளார். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் மலையாளத்தில் தயாராகி இருந்தாலும் தமிழ், தெலுங்கு, இந்தி, மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகிறது. சமீபத்தில் வெளியான இதன் டீசர் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதில் துல்கர் சல்மான், சுகுமாறன் குரூப் என்ற கேரக்டரில் நடித்துள்ளார். 36 வருடங்களாக தேடப்படும் ஒரு நபரை பற்றிய கதை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !