மீண்டும் நயன்தாராவை சீண்டிய ராதாரவி
கொலையுதிர்காலம் படத்தின் பிரஸ்மீட் நடைபெற்றபோது, ஒரு காலத்தில் கே.ஆர்.விஜய் போன்று கையெடுத்து கும்பிடுவது போல் இருப்பவர்களை கடவுள் வேடத்தில் நடிக்க வைத்தார்கள். ஆனால் இன்றைக்கு கைதட்டி கூப்பிடுவது போல் உள்ள நடிகைகளை கடவுள் வேடத்தில் நடிக்க வைக்கிறார்கள் என்று நயன்தாராவை குறித்து சர்ச்சையாக பேசினார்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் நயன்தாரா குறித்து ஒரு மேடையில் பேசியிருக்கிறார். அதில், ‛‛நயன்தாரா என்ற நடிகையைப்பற்றி நான் பேசவே இல்லை. ஆனால் பத்திரிகையில் அதை பெருசாக்கி விட்டார்கள். நானும் சரி பேசினேன் என்று வைத்துக் கொள் என்று கூறிவிட்டேன். உடனே திமுகவில் பெண்களைப் பற்றி இழிவாக பேசினார் ராதாரவி. அதனால் அவரை கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்குகிறோம் என்றார்கள். ஆனால் நான் அது என்ன தற்காலிகம், நிரந்தமாகவே போகிறேன் என்று நானே சொல்லிவிட்டுத்தான் வந்தேன். நயன்தாரா என்ன திமுகவில் கொள்கை பரப்பு செயலாளரா? என்ன உறவு உங்களுக்கு? உதயநிதிக்கும், அதுக்கும் உறவுன்னா அதுக்கு நான் என்ன செய்யுறது?'' என்று காரசாரமாக பேசியிருக்கிறார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.