மண் தரையில் படுத்து உறங்கிய சிம்பு
ADDED : 1649 days ago
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சிலம்பரசன், கல்யாணி பிரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் 'மாநாடு' படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது.
இப்படப்பிடிப்பு இரவு நேரப் படப்பிடிப்பாக பெரிய அரசியல் மாநாடு காட்சிகள் தற்போது படமாகி வருகிறது. படப்பிடிப்பின் இடைவெளியில் கிடைக்கும் நேரத்தில் மண் தரையில் சிலம்பரசன் படுத்து உறங்கும் புகைப்படங்களை படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபுவே வெளியிட்டுள்ளார்.
“நடிகர்களின் வாழ்க்கை, எளிமையின் மனிதன், இரவு நேரப் படப்பிடிப்பில், மாநாடு படப்பிடிப்புக்கு இடையில்” எனக் குறிப்பிட்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் வெங்கட் பிரபு.
சிம்புவின் எளிமையைக் கண்டு ரசிகர்கள் அவரைப் பாராட்டி வருகிறார்கள்.