மும்பைகார் - பர்ஸ்ட்லுக் வெளியானது!
ADDED : 1646 days ago
2017ஆம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் மாநகரம். சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா உள்பட பலர் நடித்த இப்படம் வசூல்ரீதியாக வெற்றி பெற்றது. இந்நிலையில் மாநகரம் படத்தை தற்போது ஒளிப்பதிவாளர் சந்தோஷ்சிவன் ஹிந்தியில் விக்ராந்த் மாசே, விஜய் சேதுபதி, தன்யா மாணிக்டலா உள்பட பலர் நடிப்பில் மும்பைகார் என்ற பெயரில் ரீமேக் செய்து வருகிறார்.சமீபத்தில்கூட இப்படத்தில் கோட் சூட் அணிந்த கெட்டப்பில் விஜய்சேதுபதி நடித்துவரும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது. இந்த நிலையில் நேற்று மும்பைகார் படத்தின் நாயகனாக நடிக்கும் விக்ராந்த் மாசேவின் பிறந்த நாள் என்பதால் அப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.