உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாதவன் குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா

மாதவன் குடும்பத்தில் 5 பேருக்கு கொரோனா

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாறு கதையை மையமாக வைத்து மாதவன் இயக்கி, நடித்துள்ள படம் ராக்கெட்ரி நம்பி விளைவு. இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது. சில தினங்களுக்கு முன் தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார் மாதவன். இப்போது அவரது குடும்பத்தினரும் இந்நோய்க்கு உள்ளாகி உள்ளனர்.

இதுப்பற்றி மாதவன் டுவிட்டரில், ‛‛எனது குடும்பத்தில் உள்ள 5 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அனைவரும் உரிய பாதுகாப்புடன் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !