கத்ரீனாவிற்கு கொரோனா
ADDED : 1670 days ago
பாலிவுட்டில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. ரன்பீர் கபூர், ஆமீர்கான், ஆலியாபட், அக்ஷய் குமார், கோவிந்தா, விக்கி கவுசல், பூமி பட்னேக்கர் ஆகியோரை தொடர்ந்து நடிகை கத்ரீனா கைப்பும் இந்நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளார்.
இதுப்பற்றி, ‛‛எனக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்துள்ளது. உடனடியாக என்னை நானே வீட்டிலேயே தனிமைப்படுத்தி, மருத்துவர்களின் அறிவுரைப்படி சிகிச்சை எடுத்து வருகிறேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். அனைவரின் அன்பு, ஆதரவுக்கு நன்றி. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்'' என தெரிவித்துள்ளார் கத்ரீனா கைப்.