உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எனக்கு திருமணமா? - மறுக்கும் சுனைனா

எனக்கு திருமணமா? - மறுக்கும் சுனைனா

காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் அறிமுகமான சுனைனா, தொடர்ந்து நீர் பறவை, வம்சம், உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த ஆண்டு பொது முடக்கத்திற்கு முன் வெளியான சில்லுக்கருப்பட்டி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் அவரது நடிப்பில் டிரிப் என்ற திரில்லர் படம் வெளியானது. தற்போது ராஜ ராஜ சோரா என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். தமிழில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகி உள்ளார்.

இந்நிலையில் போதிய சினிமா பட வாய்ப்புகள் இல்லாததாலும், வயது கூடிக் கொண்டே வருவதாலும் விரைவில் சுனைனா டாக்டர் ஒருவரை திருமணம் செய்ய போவதாக செய்திகள் பரவின். இதை அவர் மறுத்துள்ளார்.

இதுப்பற்றி, ‛‛கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நிறைய வாய்ப்புகள் தேடி வந்தன. சில இயக்குனர்கள், என்னை மனதில் கொண்டு கதைகளை எழுதியுள்ளது உற்சாகம் அளிக்கிறது. நான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக வெளியாகும் செய்திகள் உண்மையில்லை. தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் சுனைனா. மேலும் இப்போதைக்கு சினிமாவில் மட்டுமே முழுக்கவனமும் செலுத்துவதாகவும், எனது திருமணம் பற்றி பேசுவதை விட்டுவிட்டு எனது திரைப்படங்கள் பேச வேண்டும் என்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !