வலிமை : டப்பிங் பேசி முடித்தார் அஜித்
ADDED : 1640 days ago
நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. போனிகபூர் தயாரித்துள்ள இந்த படத்தில் ஹூமா குரோசி நாயகியாக நடிக்க, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
அஜித்தின் பிறந்த நாளான மே1-ந் தேதி அன்று வலிமை பர்ஸ்ட் லுக் மட்டுமின்றி படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாக உள்ளது. இந்த நிலையில், தற்போது வலிமை படத்தின் டப்பிங் பணி நடந்து வருகிறது. நேற்றோடு அஜித் தனக்கான டப்பிங்கை பேசி முடித்திருக்கிறார். அவரைத் தொடர்ந்து மற்ற நடிகர், நடிகைகள் சம்பந்தப்பட்ட டப்பிங் பணி நடைபெற்று வருகிறது.