உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பார்த்திபன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை

பார்த்திபன் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை

பார்த்திபன் ஒருவர் மட்டுமே நடித்து 2019ல் வெளியான ‛ஒத்த செருப்பு' படத்திற்கு சமீபத்தில் இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. அடுத்து இரவின் நிழல் என்ற படத்தை இயக்குகிறார். இப்படத்தை ஒரே ஷாட்டில் எடுக்கும் பார்த்திபன் அவரே நடிக்கவும் செய்கிறார். இந்நிலையில் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ரஹ்மான் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இப்படத்திற்கு இசையமைப்பதை ரஹ்மான் கூறினார். அந்த காணாளியை தனது டுவிட்டரில் பகிர்ந்து, ‛‛எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் ஏஆர்ஆர் வாய் கேட்பது அரிது. ஆமாம், இரவின் நிழலுக்கு ரஹ்மான் இசையமைப்பது பெருமை. இதுவரை அருமையான 3 பாடல்களை கொடுத்துள்ளார் என தெரிவித்துள்ளார் பார்த்திபன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !