மாநாடு சிம்புக்கு மைல்கல் - தயாரிப்பாளர்
ADDED : 1649 days ago
வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் ‛மாநாடு'. யுவன் இசை. தற்போது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட போட்டோவை டுவிட்டரில் பகிர்ந்து, ‛‛நான் பார்த்த வரைக்கும் மாநாடு படம் சிம்புவிற்கு, வெங்கட்பிரபுவிற்கும் ஒரு மைல்கல்லாக அமையும். இருவருக்கும், உடன் பணிபுரிந்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்'' என தெரிவித்துள்ளார்.