உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போன சிரஞ்சீவி படம்

ஜூன் மாதத்திற்கு தள்ளிப்போன சிரஞ்சீவி படம்

கொரட்டல்லா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி, ராம் சரண், காஜல் அகர்வால் நடித்துள்ள படம் ஆச்சார்யா. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் ஆச்சார்யா படத்தை மே மாதம் 23ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் எதிர்பாராதவிதமாக கொரோனா இரண்டாவது அலை பரவிக்கொண்டிருப்பதால், ஆச்சார்யா பட ரிலீசை ஜூன் மூன்றாவது வாரத்திற்கு தள்ளி வைத்துள்ளனர். மேலும், இந்த படத்தை அடுத்து லூசிபர் மலையாள படத்தில் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க தயாராகிக் கொண்டிருக்கிறார் சிரஞ்சீவி. அந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !