என்னை திட்டாதீங்க...! - டுவிட்டரில் கெஞ்சிய நட்டி நடராஜ்!
ADDED : 1633 days ago
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள கர்ணன் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்றிருக்கும் அதே வேளையில் சாதிய ரீதியான சில சலசலப்புகளையும் அப்படம் உருவாக்கியிருக்கிறது. அதோடு இப்படத்தில் கொஞ்சமும் ஈவு இரக்கமற்ற ஒரு அரக்கன் போன்ற நெகட்டிவ் போலீஸ் வேடத்தில் நடித்திருந்த நட்டி நடராஜை, சோசியல் மீடியாக்களில் திட்டித்தீர்த்து வருகிறார்கள். இதனால் நொந்து போய் விட்டார் மனிதர்.
அதையடுத்து தனது டுவிட்டரில், ‛‛என்ன திட்டாதீங்க எப்போவ், ஆத்தோவ், அண்ணோவ்... கண்ணபிரானாக நடிச்சுதான்பா இருக்கேன். போன் மெசேஜ்ல திட்டாதீங்கப்பா... முடியலப்பா... அது வெறும் நடிப்புப்பா... ரசிகர்களுக்கு நன்றி'' என பதிவிட்டுள்ளார் நட்டி நடராஜ்.