உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினி அரசியலுக்கு வராதது வருத்தமே - கே.எஸ்.ரவிக்குமார்

ரஜினி அரசியலுக்கு வராதது வருத்தமே - கே.எஸ்.ரவிக்குமார்

மித்ரன் ஜவகர் இயக்கத்தில் கே.எஸ்.ரவிக்குமார் முதன்மை வேடத்தில் நடித்துள்ள படம் மதில். இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இப்படம் பற்றி கே.எஸ்.ரவிக்குமார் கூறுகையில், ‛‛மனசாட்சி சொல்படி தைரியமாக எதிரிகளை களத்தில் சந்திக்கும் ஒரு தகப்பனின் உரிமை குரல் தான் 'மதில்'. படம் ஓடிடியில் வருகிறது. அதை யாரும் தடுக்க முடியாது. இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது என்றார்.

நடிகர்களின் அரசியல் பற்றி கூறுகையில், கமல், குஷ்பு உள்ளிட்டோர் என் நண்பர்கள் தான். அவர்கள் வெற்றி பெற விரும்புகிறேன். ரஜினி அரசியலுக்கு வராதது வருத்தமாக இருந்தது. இருப்பினும் அவரது ஆரோக்கியம் முக்கியம். மீண்டும் ரஜினி, கமலை இயக்க நான் தயாராக உள்ளேன். அதற்கான கதையும் என்னிடம் உள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !